ஜூலை. 13.
கரூர் மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு துறையின் வணிகர்கள்.பானிபூரி கடைகள் மற்றும் சவர்மா போன்ற அசைவ உணவு கடை உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு உணவுப் பாதுகாப்பு துறை சம்பந்தமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தகூடாது. அறிவுறுத்தப்பட்டு RUCO (Repurpose Used Cooking Oil) திட்டத்தில் வழங்க அறிவுறுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு வழங்கும் உணவுகள் எந்த சுவையூட்டிகள் மற்றும் நிறம்மூட்டிகள் சேர்க்க கூடாது.
சாலையோர உணவு வணிகர்கள். பானிபூரி கடைகள் அனைவரும் உணவுப் பாதுகாப்பு பதிவுச் சான்று கட்டாயம் பெற்று உணவு வணிகம் செய்ய வேண்டும். உணவு விற்பனையாளர்கள் அனைவரும் மருத்துவ சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். பணியாளர்கள் தலையுறை மற்றும் கையுறை கட்டாயம் அணிய வேண்டும். தயாரிப்பு தேதி மற்றும் காலவதி தேதி அச்சிடப்பட்ட உணவு வகைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பொதுமக்களுக்கு வழங்கும் உணவுகள் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான முறையில் வழங்க வேண்டும்.
மேலும் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் நெகிழிபைகள் விற்பனை செய்யக்கூடாது. விதி மீறி செயல்படும் கடைகளுக்கு உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உணவுப் பொருட்கள் தொடர்பான புகார்களுக்கு. தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு துறையின் 9444042322 என்ற எண்ணிற்கு Whatsapp வாயிலாக புகார்களை தெரிவிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.