ஜூலை.1.
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் மு .க .ஸ்டாலின் முதல் முறையாக கரூர் மாவட்டத்திற்கு இன்று வருகை புரிந்தார் .திருச்சியில் இருந்து வந்த அவருக்கு குளித்தலை, லாலாபேட்டை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், வெங்க கல்பட்டி ஆகிய இடங்களில் ஆயிரக் கணக்கில் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் கரூர் மாவட்ட தொழில் வளர்ச்சி குறித்து முதல்வர் மு .க .ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
கரூரில், ஜவுளித் தொழில், கொசுவலை உற்பத்தி, கயிறு உற்பத்தி, வர்த்தகம் மற்றும் உணவு தானியங்கள் உற்பத்தி, வாகனங்களுக்கான கூண்டு கட்டும் தொழில் ஆகிய தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் மற்றும் தொழில் கூட்டமைப்பினருடன் கலந்துரையாடல் கூட்டத்தில் அவர்களது கருத்துக்களை கேட்டறிந்தார்.