ஜூலை.29.
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் வல்லகுளம், திருமலை ரெட்டிபட்டி, வேப்பங்குடி, கிருஷ்ணராயபுரம் வட்டம் மஞ்சாநாயக்கன்பட்டி ஆகிய 4 இடங்களில் ஆவின் நிறுவனத்தின் 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ரூ.106.51 லட்சம் மதிப்பு குளிர்விப்பு நிலையங்களை பால்வளத் துறை அமைச்சர் மனோதங்கராஜ் இன்று திறந்து வைத்தார். கரூர் வட்டம் தோரணகல்பட்டி ஆவின் குளிரூட்டும் மையத்தில் 50000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய பால் குளிர்விப்பு மையம் அமைக்கப்பட்டு வரும் பணியை பார்வையிட்டார்.
கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர், எம்எல்ஏக்கள் மாணிக்கம் (குளித்தலை), சிவகாமசுந்தரி, (கிருஷ்ணராயரம்), இளங்கோ (அரவக்குறிச்சி), கரூர் மாநகராட்சி மேயர் கவிதா முன்னிலை வகித்தனர்.
பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறியது-
முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின் பேரில், கிராமம் கிராமமாக சென்று பால் வளத்தை பெருக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு கூடுதலாக 3.50லட்சம் விட்டர் பால் உற்பத்தி அதிகப்படு த்தப்பட்டுள்ளது.
உதாரணமாக ஒரு விவசாயி பால் தரும்பட்சத்தில் அதில் எவ்வளவு கொழுப்பு சத்து மற்றும் புரத சத்து உள்ளது என்பதை கணக்கிட்டு விலை கொடுக்க வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை வைத்துக்கொண்டு உள்ளர்கள். இப்பொழுது அதை நிறைவேற்ற தரத்துடன் கூடிய பெல்ஜியம் நாட்டில் இருத்து பால் பரிசோதனை செய்யும் இந்திரங்கள் வாங்கப்பட்டு அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் செயல்பட்டு வருகிறது.
இதுவரை ஒரு விட்டர் பாலிற்கு ஒரே விலை என்பது மாற்றப்பட்டு தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்பட்டு அதற்கான ரசீதும் வழங்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாதக்கணக்கில் நிலுவைத் தொகை வைத்திருந்த நிலையை மாற்றி பத்து நாட்களுக்கு ஒரு முறை பட்டுவாடா செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்ற மாதம் மட்டும் 5000க்கும் மேற்பட்ட கால்நடை வாங்குவதற்கான கடன் வசதியை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறோம். 2 லட்சம் கறவை மாடுகள் புதியதாக வாங்குவதற்கு கடன் வசதி, 10 மற்றும் 15 மாடுகளுக்கு மேல் வைத்து வளர்க்கக் கூடியவர்கள் சிறிய பால் பண்ணைகள் வைப்பதற்கும், படித்த இளைஞர்களை ஈடுபடுத்தி அவர்களை ஊக்கப்படுத்தும் முயற்சிகளை எடுத்து வருகிறோம்.
அதே நேரத்தில் தனியார் நிறுவனங்களை உத்திரவாதமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஒரு சீசனில் விலை, இன்னொரு சீசனில் விலையைத் தர மாட்டார்கள். எங்கெல்லாம் ஆவின் நன்றாக உள்ளதோ அங்கெல்லாம் விலை அதிகம் கொடுக்கிறார்கள். எங்கெல்லாம் ஆவின் இல்லையோ அங்கெல்லாம் குறைந்த விலையைக் கொடுக்கிறார்கள். ஆனால் ஒரு அரசு நிறுவனம் அப்படி செய்ய முடியாது. இதுக்கு என்று நிரந்தரமான நிலை உள்ளது என்றார் அமைச்சர். மாநகராட்சி துணை மேயர் சரவணன், ஆவின் பொது மேலாளர். நாகராஜன், இணை பதிவாளர் இரணியன், மாவட்ட ஊராட்சி குழு துணைதலைவர் தேன்மொழி தியாகராஜன், பால் உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.