நவ.1.
விழிம்பு நிலை மக்களின் வாழ்வையும் அவர்கள் அனுபவித்து வரும் துன்பங்களையும் விளக்கும் வகையில் நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத்தின் மேம்பாட்டிற்கு நடிகர் சூர்யா ஒரு கோடி நிதியை முதல்வரிடம் வழங்கினார். காசோலையை பெற்றுக்கொண்ட முதல்வர் முக ஸ்டாலின், ஜெய்பீம் இருளர் குறித்த படம் எடுத்ததோடு தனது கடமை முடிந்துவிட்டது என கருதாமல் அம் மக்களின் மேம்பாட்டிற்காக ஒரு கோடி ரூபாய் நிதியை நடிகர் சூர்யா வழங்கியது என்னை நெகிழச் செய்தது. இருளர் வாழ்வில் ஒளியேற்றும் முயற்சியாகும். இதுபோன்ற செயற்கரிய செயல்களை அனைவரும் செய்ய வேண்டும் என பாராட்டு தெரிவித்தார் முதல்வர்,