கரூர், மே.8.
வெங்கமேடு -பசுபதிபாளையத்தில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும் அமைச்சருமான வி. செந்தில் பாலாஜி பேசியதாவது-
கொரோனா காலத்தில் வீட்டில் உள்ளவர்களையே நாம் தள்ளியிருந்து தான் பார்த்துக் கொண்டிருந்தோம். சாப்பாட்டை தட்டில் வைத்து அறைக்குள் தள்ளி விடக் கூடிய நிலைமை இருந்தது .ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் சிகிச்சை பெறுபவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கொரோனா வார்டுக்குள்ளேயே சென்று சிகிச்சை பெறுவோருக்கும், மருத்துவர்களுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தினார்.
மக்கள் வேலைவாய்ப்புகளை இழந்து வீடுகளில் இருக்கின்ற பொழுது குடும்ப அட்டைகளுக்கு ரூ. 5000 வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை வைத்தார். ஆனால் ஆட்சியில் இருந்த அதிமுக வெறும் ஆயிரம் மட்டுமே கொடுத்தனர் . நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீதம் நான்காயிரம் தருவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த உடனேயே வழங்கிவிட்டார்.
5ஆண்டு ஆட்சி இருக்கிறது என்று நினைக்காமல் ஆட்சி பொறுப்பேற்ற முதல் நாளிலேயே முதல் கையெழுத்து மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டத்தை உத்தரவிட்டார். சொல்லிக் கொண்டே போகலாம் எண்ணற்ற திட்டங்கள் இரண்டு ஆண்டுகளிலேயே 85% வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார் முதல்வர். 20 ஆண்டுகளாக பதிவு செய்து காத்திருந்த விவசாயிகளுக்கு அதிமுக ஆட்சி மின் இணைப்பு வழங்கவில்லை. ஆனால் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்கி இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளார். கைத்தறி மற்றும் விசைத்தறிகளுக்கும் தேர்தல் வாக்குறுதி படி இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
கரூர் பழைய மருத்துவமனை 3 ஆண்டுகளாக மூடி வைத்தது அதிமுக ஆட்சி. ரூ.10கோடி நிதி அளித்து மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. கரூர் புதிய பேருந்து நிலையம் இன்னும் சில மாதங்களில் திறக்கப்படும். தேர்தல் வாக்குறுதி படி கரூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு நிதி வழங்கப்பட்டுள்ளது. சிப்காட்,, கரூர் காமராஜ் புதிய மார்க்கெட், வெங்கமேட்டில் மீன் அங்காடி, புதிய மருத்துவமனை, புதிய சுகாதார நிலையம் அமைய இருக்கிறது. விவசாய கல்லூரி, தடுப்பணைகள், ஜவுளி பூங்கா, முருங்கை ஏற்றுமதி பூங்கா என மாவட்டத்தில் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம் . கரூர் மாநகரில் மின்சார கம்பிகள் தொங்காதபடி புதைவட மின்கம்பி அமைப்பு ஏற்படுத்தப்படும்.
அதிமுக ஆட்சியில் முழுமையாக ஒரு திட்டத்தை நிறைவேற்றியதாக கூற முடியுமா?. முதல்வர் தளபதி, விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்து 2.50 லட்சம் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி இருக்கிறார்கள். கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் வீட்டு மனை பட்டா வழங்க பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கரூர் மாவட்டத்திற்கு என்ன செய்தோமென அதிமுகவினரால் பட்டியலிட முடியுமா?.
410 ரூபாய்க்கு விற்ற சிலிண்டர் இன்று 1200 ரூபாய். பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே போகிறது அதிமுக வினரால்இதை கேட்க முடியுமா?. எடப்பாடி இதையெல்லாம் கேட்கமாட்டார். சட்டமன்றத்தில் ஆளுநர் வரம்பு மீறிய போது நொடி பொழுதில் நமது முதல்வர் தளபதி அவர்கள் தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஆனால் எடப்பாடி ஆளுநரை விட வேகமாக அவையைவிட்டு ஓடி விட்டார் . இதுதான் அவரது ஆளுமை. அடிமை ஆட்சி நடத்தியவர்கள் இந்த அரசின் சாதனைகளை பொறுக்க முடியாமல் அவதூறுகளை பரப்பிக் கொண்டிருக்கின்றனர் என்றார்.
வெங்கமேடு அண்ணா சிலை அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு மாநகர வடக்கு பகுதி செயலாளர் கரூர் கணேசன் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் கே செந்தில் சரவணன் வரவேற்று பேசினார். நாஞ்சில் சம்பத் சிறப்புரையாற்றினார். சட்டத்துறை இணைச் செயலாளர் என். மணிராஜ், பி விஜயகுமார், மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், மாநகர செயலாளர் எஸ் பி.கன கராஜ்,, வடக்கு பகுதி கழக நிர்வாகிகள் எம்.பாண்டியன், பரணி சுந்தர்ராஜன், கே எம் பெரியசாமி, தமிழ்நாடு செல்வராஜ், விபிஎன் ரஞ்சித் குமார் எஸ் சாந்தி, ஆர்.லட்சுமணன், வி.கிரி வாசகன், எஸ். பிரபாகரன் எஸ். சண்முகம் ஒமேகா சுப்பிரமணி பி.ராவணன், பகுதி செயலாளர்கள் கே. சுப்ரமணியன், கோல்ட் ஸ்பாட் ஆர் எஸ் ராஜா, கா அன்பரசன், விகேடி.ராஜ்கண்ணு, இளைஞர் அணி செயலாளர்வெங்கமேடு சக்திவேல், வார்டு கழக நிர்வாகிகள்கே. வடிவேல் அரசு, எஸ்.பி. நாகராஜன், டி நாச்சிமுத்து, பி.தங்கத்துரை, கே. பாலசுப்பிரமணியம், ஏ ராஜா, எம். சண்முகம், எஸ். கார்த்திகேயன் மாமன்ற உறுப்பினர்கள் எஸ். மாரியம்மாள், ஏ. பூங்கோதை, வி.ராஜேஸ்வரி முன்னிலை வகித்தனர். வட்டக் கழகச் செயலாளர் பி.சசி குமார் நன்றியுரை கூறினார்.
கரூர் மத்திய கிழக்கு மாநகரப் பகுதி கழகம் சார்பில் பொதுக்கூட்டம் பசுபதிபாளையம் மெயின் ரோடு கலைஞர் திடலில் நடைபெற்றது பகுதி கழக செயலாளர் – மாநகராட்சி மண்டல குழு தலைவர் ஆர்.எஸ். ராஜா தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் பசுவை சக்திவேல் வரவேற்புரை யாற்றினார். நாஞ்சில் சம்பத் சிறப்பு உரையாற்றினார்.
மாநில சட்டத்துறை இணைச் செயலாளர் என் மணிராஜ், தொழிலாளர் அணி துணைச் செயலாளர் பி .விஜயகுமார், நகர செயலாளர் எஸ் பி கனகராஜ், மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி பி. சரவணன், பகுதி செயலாளர்கள் கே .சுப்பிரமணி, க.அன்பரசன், மாவட்ட கழக நிர்வாகிகள் பூவை ரமேஷ் பாபு ,மகேஸ்வரி சுப்பிரமணி, சுப .ராஜகோபால் காலனி செந்தில், ஆண்டாள் பாலகுருபரன், மத்திய கிழக்கு மாநகர நிர்வாகிகள் டி நாச்சிமுத்து என். பரமசிவம், பிஏ குமார், வள்ளி, வேல்முருகன், எம் பாலசுப்பிரமணியன் எஸ் ஞானசேகரன் எஸ் வடிவேல், சந்திர மோகன்ராஜ் மருதநாயகம்,மாநகர நிர்வாகிகள் கேவி தங்கவேல், எம் பாண்டியன், கே எஸ் அறிவின்ஸ், எம் நிஷா, அங்கு நா. பசுபதி, கே எம். பாலகிருஷ்ணன், பி சுப்பிரமணி, கே இளமுருகு, ஆர் வெங்கடேஷ், பி பழனிவேல், கே ஆர். சுந்தரராஜன், விஜி எஸ்.குமார் , ஏ ஆரோக்கியஜெயபால்,பி சண்முகம். ஜி.ஜீவானந்தம், அணி நிர்வாகிகள் எஸ். சக்திவேல், ஜிம் எம் சிவா, ஜே பிரின்ஸி, இரா குடியரசு, பழ.அப்பாசாமி, தென்னிலை பி. பாலு, பி. சங்கர், ஆர் ஜோதிபாசு, பி. மோகனசுப்பு, சி நவாஸ் கான், ம.அம்பிகாபதி, தம்பி எஸ். சுதாகர், வார்டு செயலாளர்கள் கே பழனிகுமார், பி. இளங்கோவன், ஏ லாரன்ஸ்,டி.மதியழகன், எம் ஜாகிர் உசேன், எஸ்.கே சிவகுமார், எஸ், முருகானந்தம், மாமன்ற உறுப்பினர்கள் கே. அருள்மணி, வி.நந்தினி, எஸ் இந்திராணி முன்னிலை வகித்தனர் கரூர் மத்திய கிழக்கு மாநகரப் பிரதி எம் நாராயணன் நன்றியுரை கூறினார்.