டிச.5.
ஒன் இந்தியா ஊடகம் சிறப்புக் கட்டுரை வருமாறு-
கடந்த ஆண்டு சென்னையில் பில்லர் பாக்ஸ் என சொல்லப்படும் மின் உதவி பெட்டிகளை தரை மட்டத்தில் இருந்து 1 மீட்டர் உயரத்தில் பொருத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார் அன்றைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி..
அதன் அடிப்படையில்., 4,658 பில்லர் பாக்ஸ், தரையில் இருந்து 1 மீட்டர் உயர்த்தப்பட்டன. சென்னை மற்றும் புறநகருக்கு, 240 துணை மின் நிலையங்களில் இருந்து செல்லும், 1,877 மின் வழித்தடங்கள் வாயிலாக, 41,311 டிரான்ஸ்பார்மர்கள் உதவியுடன் மின் விநியோகம் செய்யப்படுகிறது. தாழ்வான இடங்களில் இருந்த, 4,658 ‘பில்லர் பாக்ஸ்’ எனப்படும் மின் விநியோக பெட்டிகளின் உயரம், தரையில் இருந்து, 1 மீட்டர் உயர்த்தப்பட்டது. தண்ணீர் தேங்கும் இடங்களில் இருக்கும் துணைமின் நிலையங்களில் உள்ள டிரான்ஸ்பார்மர்களின் உயரமும் அதிகரிக்கப்பட்டது.
அதன் விளைவாகவே மின்சாரம் இன்று அதிக பாதிப்பின்றி நிறுத்தப்பட்ட 80% இடங்களில் மழை நின்ற மறு நிமிடமே வழங்கப்பட்டுள்ளது.. இல்லையெனில் மேலும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகியிருக்கும்.. அன்று அவர் எடுத்த ஆக்ஷனால் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.