நவ.21.
இருசக்கர வாகனத்தில் ஒருவர் கரூர் வெள்ளியணை காவல் நிலைய சரகம், கரூர் to திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏழூர் to வீரராக்கியம் வரையிலான பகுதியில் அதிவேகமாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாகவும் மற்றும் சாகசம் செய்து அதனை முகநூல் பக்கத்தில் ரீல் ஆக பதிவிட்டார். தொலைக்காட்சிகளிலும் இது ஒளிபரப்பப்பட்டு வேகமாக பரவி வந்தது.
மத்திய மண்டலம் ஐ.ஜி. டி.ஐ.ஜி உத்தரவின்படி கரூர் மாவட்ட எஸ்.பி. முனைவர் பிரபாகர் மேற்பார்வையில், பசுபதிபாளையம் வட்ட காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கரூர் மாவட்ட காவல்துறையில் இயங்கி வரும் சமூக வலைதள பிரிவு போலீஸாரும் ஆய்வு செய்து விசாரணையில் இருசக்கர வாகனத்தை ஓட்டியது தங்கபாண்டியன், திருக்காம்புலியூர், LNS, கரூர் என்று தெரிந்து அவரை கைது செய்து அவர் ஓட்டிய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. வெள்ளியணை வழக்கு பதிவு செய்து அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
கரூர் மாவட்ட காவல் துறையில் சமூக வலைதள கண்காணிப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. மேற்படி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனங்கள் ஓட்டி வீடீயோ பதிவிடுவதும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசி அதை சமூக வலைதளங்களில் பதிவிடுவதும் கண்டறியப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் மாவட்ட எஸ்.பி. பிரபாகர் எச்சரித்துள்ளார். மேலும் இதுபோன்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருச்சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் பற்றியும், அவ்வாறு இருசக்கர வாகனத்தை ஓட்டி வீடியோ எடுத்து Likes பெறுவதற்காக சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் பற்றியும் பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக 04324 296299 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.