ஜூன்.7.
டெண்டர் முறைகேடு வழக்கில் .வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம் – சென்னை உயிர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் சாலை சீரமைப்பு, மழைநீர் வடிகால் அமைக்க டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றது. அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த வேலுமணி உள்ளிட்டோர் மீதுவழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கில், முறைகேடு தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கலாம் என தமிழ்நாடு அரசுக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2018, 2019ஆம் ஆண்டுகளில் சாலைகள் சீரமைக்க ரூ. 300 கோடி மதிப்பிலும், மழை நீர் வடிகால் கட்டமைப்புகளுக்கு ரூ. 290 கோடி மதிப்பிலும், 37 டெண்டர்கள் விடப்பட்டன. டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடைபெற்றதாக, அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.