ஏப்.11.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையின் போது கருப்பைவாய், மார்பக மற்றும் வாய் புற்று நோய்களை பரிசோதனை மூலம் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தகுந்த சிகிச்சையளிக்கும் திட்டம் முதலமைச்சர் அவர்களால் துவங்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டத்தில் ஏப்ரல் மாத இறுதிக்குள் இத்திட்டம் விரிவு படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தில் கருப்பைவாய் மார்பக மற்றும் வாய்புற்று நோய் ஆகியவற்றை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 101 தலவாழ்வு மையங்களில் பணியாற்றும் பயிற்சி பெற்ற இடைநிலை சுகாதார செவிலியர்கள் (MLHP) மற்றும் சுகாதார செவிலியர்கள் (Staff Nurse) பரிசோதனைகள் மேற்கொண்டு அவர்களில் மேற்சிகிச்சை தேவைப்படும் நபர்களை அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி தொடர் சிகிச்சை மேற்கொள்களப்படுவார்கள். மேலும், பெண் சுகாதார தன்னார்வலர்கள்(WHV) அவர்கள் பணியாற்றும் பகுதிகளுக்கு சென்று 1 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள், 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு இத்திட்டத்தின் நோக்கம் குறித்த அழைப்பிதழ் கொடுத்து அவர்களை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 101 நல்வாழ்வு மையங்களுக்கு வரவேற்பார்கள்.
இதனை கரூர் மாவட்டத்தில் உள்ள 18 வயது திரம்பிய அனைத்து ஆண்கள் பெண்கள் மற்றும் 30 வயதுடைய அனைத்து பெண்களும் இத்திட்டத்தினை பயன்படுத்தி தங்களை பரிசோதனைக்கு உட்படுத்தி புற்று நோயிலிருந்து பாதுகாத்து கொள்ளுமாறு கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.