இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் குவித்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் விக்கெட்கள் சரிந்த வண்ணம் இருந்தன. எனினும் அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடினார். அவர் 17 பந்துகளில் அரை சதம் எடுத்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி 37 பந்துகளை நொறுக்கி சதம் எடுத்தார்.
இதன் மூலம் உலக அளவில் டி20 போட்டிகளில் இரண்டாவது அதிவேக சதம் மற்றும் மூன்றாவது அதிவேக சதம் ஆகிய இரண்டு முக்கிய சாதனைகளை படைத்தார். மேலும் டி20 போட்டியின் ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்ஸ் அடித்த இந்திய வீரர், இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ஸ்கோரை அடித்த வீரர் என பல்வேறு சாதனைகளை படைத்தார்.
இந்த வரிசையில் இந்தியாவின் ரோஹித் சர்மா, டேவிட் மில்லர் (தென் ஆப்பிரிக்கா) ஆகியோர் 35 பந்துகளில் சதம் அடித்து முதலிடத்தில் உள்ளனர்.
அபிஷேக் சர்மாவின் ஆட்டத்தால் இந்திய அணி 20 ஓவர்களில் 247 ரன்களை குவித்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 97 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.