டிச.30.
கரூர் மாவட்ட கூட்டுறவுபால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் தோரணக்கப்பட்டி, டி.செல்லாண்டி பாளையம் ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை செய்ய மொத்த மற்றும் சில்லறை விற்பனை முகவர்கள் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுருர் மாவட்டத்தில் ஆவின் பால் மற்றும் பால் உப பொருட்கள் விநியோகம் செய்வதற்கு சில்லறை விற்பனையாளர்கள் (Agent/Parlour) மற்றும் மொத்த விற்பனையாளர்கள் உபபொருட்கள் (WSD ByProducts} பகுதிகளுக்கு நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன.
கரூர் மாவட்டத்தில் உள்ள 1) குளித்தலை, 2) கிருஷ்ணராயபுரம், 3) கடவூர், 4) அரவக்குறிச்சி, 5) மணிமங்கலம், 6) புகழூர் , 7) தோகைமலை, 8) பரமத்தி, 9) சினைதாராபுரம், 10) தென்னிலை பகுதிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த உப்பொருட்கள் விற்பனை செய்திட சொந்தமாகவோ வாடகை அடிப்படையிலோ இடவசதி மற்றும் பால் பொருட்களை இருப்பு வைத்து விற்பனை செய்வதற்கு தேவையான குளிர்சாதன வசதியும். உபபொருட்கள் விநியோகம் செய்ய வாகன வசதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சில்லறை விற்பனை முகவர்கள் விற்பனை செய்வதற்கு சொந்த கட்டிடம் வாடகை கட்டிடம் இடவசதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி ‘பொதுமேலாளர், கரூர் மாவட்ட கூட்டுறவு உற்பத்தியாளர்கள் ஒன்றியம் தோரணக்கல்பட்டி, டி.செல்லாண்டிபாளையம் கரூர் 639003. தொடர்புக்கு தொலைபேசி துணை மேலாளர் விற்பனை பிரிவு 95859 75281, விற்பனை பிரிவு அலுவலர்கள் 96983 77992, 97865 71615.