ஜூன்.11.
கோடைவிடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. கரூர் மணவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோடைவிடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகள் ஆதார் பதிவு மற்றும் புதுப்பிக்க நிரந்தர ஆதார் மையத்திற்கு செல்வதை தவிர்க்க தாம் பயிலும் பள்ளியிலேயே அங்கீகரிப்பட்ட முகவர் மூலம் ஆதார் எண் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தலை பயிலும் பள்ளியிலேயே மேற்கொள்ள சிறப்பு முகாம் நடத்தப்பட்டுவருகிறது.
கரூர் மாவட்டத்தில் அனைத்து தொடக்க நடுநிலை. உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள மாணவிகளில் புதிதாக ஆதார் எடுக்கவும் மற்றும் புதுப்பிக்கும் தேவை உள்ளோரும் கரூர் மாவட்டத்தில் வட்டாரம் வாரியாக அட்டவணை தயார் செய்யப்பட்டு சிறப்பு முகங்கள் நடத்தப்படுகிறது.
தொடர்ந்து, தேவையுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இந்த முகாம் தொடசியாக நடைபெறவுள்ளது.
முகாமைப் பயன்படுத்திக்கொண்டு ஆதார் திருத்தங்கள் மற்றும் புதிய ஆதார் எண்களைப் பெற்றுத்தரவும் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுமதி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.