நவ.11.
மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கைத்தறி துணிநூல் அமைச்சர் காந்தி ஆகியோர் கரூர் கோடங்கிப்பட்டி, காக்காவாடி பகுதிகளிலுள்ள தனியார் ஜவுளி பூங்காக்களில், கட்டுமானம் மற்றும் புணரமைப்பு பணிகளை ஆய்வு செய்தனர்.
பின்னர் கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் தெரிவித்ததாவது:
தமிழ்நாட்டில் உள்ள நெசவாளர்கள் மற்றும் ஐவுளித் துறையினருக்காக என்னற்றத் திட்டங்களை அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக கரூர் மாவட்டத்திலுள்ள நெசவாளர்கள் தொழிலை மேம்படுத்துவதற்காக 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் கைத்தறி துறை சார்பாக தமிழ்நாட்டில் 10 சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் தலா ரூ.200 கோடி செலவில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
கரூர் சரகத்தில் 43 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. சங்க உறுப்பினர்களை கொண்டு உள்ளூர் உற்பத்தி இரகங்களான பெட்ஷீட் தலையணை உறை, துண்டு, மற்றும் ஏற்றுமதி இரகங்களான எம்பிராய்டரி குஷன் கவர், பீச் மேட், குல்ட், பாய் மெத்தை பை ஆகிய இரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு ஆண்டுதோறும் ரூ.43.00 இலட்சம் வரையிலான இரகங்கள் கொள்முதலுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அவ்வப்போது கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் வழங்கும் குறியீட்டின்படி ஏற்றுமதி இரகங்களான மேட், ரன்னர், Diamond Bath Towel Honey Comb Bath Towel ஆகியவை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கப்படும் சிறப்பு திட்டங்களுக்கான இரகங்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் அமைந்துள்ள எம்.எம்.76 கரூர் தொழிலியல் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் 6825 சதுர அடிபரப்பளவில் அமைந்துள்ள தொழிற்கூடத்தில் 100 தறிகள் கொண்ட சிறிய அளவிலான கைத்தறிபூங்கா அமைக்கதிட்டமிடப்பட்டு, இதில் முதல் கட்டமாக 40 தறிகள் மற்றும் எலக்ட்ரானிக் ஐக்கார்டு மெஷின், மோட்டரைஸ்டு வார்ப்பிங் மெஷின் உள்ளிட்ட கூடுதல் உபகரணங்கள் நிறுவி ஆண்டு முழுவதும் நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பை வழங்கி, ரூ.600 முதல் ரூ.700 வரை தினசரி கூலி பெறும் வகையில் சந்தையில் அதிக வரவேற்புள்ள வீட்டு உபயோக துணி இரகங்கள், உலகத்தரம் வாய்ந்த மேட் உள்ளிட்ட ஏற்றுமதி இரகங்கள் உற்பத்தி செய்திட திட்டமிடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கரூர் சரகத்தை பொறுத்தவரையில் வீட்டு உபயோக துணி இரகங்கள், மதிப்பு கூட்டிய மற்றும் ஏற்றுமதி இரக மேட் இரகங்களுக்கு சந்தையில் தேவை அதிகரித்துள்ளது. மேலும் தற்போதைய சந்தை நிலவரப்படி கைத்தறியில் உற்பத்தி செய்யப்பட்ட சர்ட்டிங் இரகங்களுக்கும் தேவை அதிகரித்துள்ளது.
முதற்கட்டமாக நிறுவப்படும் 40 கைத்தறிகள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 60 நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பும் நிலையான வருமானமும் வழங்குவது உறுதி செய்யப்படும். இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 60 கைத்தறிகள் இப்பூங்கா அமைவிடத்திற்கு அருகிலேயே வாடகை தொழிற்கூடத்தில் நிறுவி செயல்பட உத்தேசிக்கபட்டுள்ளது. முதற்கட்ட செயல்பாடுகளின் அடிப்படையில் இப்பூங்காவின் மூலம் நாளொன்றிற்கு தறி ஒன்றிற்கு சராசரியாக 8 மீட்டர் வீதம் மாதம் ஒன்றிற்கு 8,000 மீட்டர். ரூ.10.00 இவட்சம் மதிப்பீட்டில் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.