மார்ச்.4.
தமிழகம் முழுவதும் நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. இத்தேர்தலில் சென்னை தவிர்த்து அதிமுக 1162 இடங்களில் போட்டியிட்டது. 149 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது . எனினும் 343 இடங்களில் டெபாசிட்டை இழந்தது. அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி 12.8 சதவிகிதம்.
இவ்வளவு பெரிய தோல்விக்கு மத்தியிலும் அதிமுக ரெக்கார்ட் பிரேக் ஒன்றைச்செய்துள்ளது என்பதைக்கேள்விப்பட்டால் ஆச்சர்யப்படுவீர்கள். திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி 56 ஆண்டு கால வரலாற்றில் முதன் முறையாக சேர்மன் பதவியைக் கைப்பற்றியது. சுயேச்சை உதவியோடு அதிமுக கைப்பற்றியுள்ளது அதிமுக சார்பில் சுதா நகராட்சித்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் . மொத்தம் இருபத்தி ஏழு வார்டுகளில் திமுக கூட்டணி 11 அதிமுக கூட்டணி 11 இடங்களை பெற்று சம பலத்துடன் இருந்தது . சுயேச்சையாக ஐந்து பேர் வெற்றி பெற்றுள்ளனர். சுயே. ஆதரவைப் பெற்றால் மட்டுமே தலைவர் பதவியை கைப்பற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டது. திமுக சார்பில் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு கீதா மைக்கேல்ராஜ் அதிமுக சார்பில் சுதா பாஸ்கரன் போட்டியிட்டனர். இதில் சுதா வெற்றிபெற்றார்.