ஆக.24.
கரூர் சின்னாண்டாங் கோவில் எல்.பி.ஜி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன், ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். நாய்கள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட இவர் வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்து வளர்த்து விற்பனை செய்து வருகிறார். அரிய வகை நாய்கள் குறித்த தகவல்களை அவர் வலைதளங்களில் வெளியிடுகிறார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பிரதிநிதிகள் குறிப்பிட்ட வகை நாய் குட்டி வேண்டும் என கேட்க, அதன் பின்னர் கேரளா வந்த ராகுல் காந்தியை சரவணன் சந்திக்க ஏற்பாடு செய்ததன் பேரில் 3 ஜாக் ரசல் டெரியர் வகை நாய் குட்டிகளுடன் அவரை சந்தித்தார்.
மூன்றில் ஒரு குட்டியை ராகுல் காந்தி தேர்வு செய்தார். அந்த நாய்க்குட்டி பிறந்து 40 நாட்கள் மட்டுமே ஆகியிருந்தது. அதனால் மீண்டும் கரூருக்கு கொண்டு வரப்பட்டு 60 நாட்கள் ஆன பின்னர் அதனை டெல்லிக்கு எடுத்துச் சென்று ராகுல் காந்தி வீட்டில் அவரிடம் சரவணன் நேரில் வழங்கினார். இது தொட ர்பாக சரவணன் கூறும்போது,இந்த வகை நாய்கள் குடும்ப உறுப்பினர்களிடம் எளிதாக பழகும். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். இதனால் பலரும் ஆர்வமாக வாங்கி செல்கிறார்கள் என்றார்.