நவ.13.
கரூர் கரூர் நகர உட்கோட்டம், கரூர் நகர காவல் நிலைய சரகம் கரூர் to ஈரோடு மாநில நெடுஞ்சாலை, குட்டக்கடை அருகே இன்று அதிகாலை 00.30 மணியளவில் நெடுஞ்சாலை ரோந்து பணியில் இருந்த தலைமை காவலர் ஆண்டனி இளங்கோ மற்றும் முதல் நிலை காவலர் தீனதயாளன் ஆகியோர் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை (TATA Indigo) நிறுத்தி சோதனை செய்த போது, காரில் அரசால் தடைசெய்யப்பட்ட சுமார் ரூ.1,00,000/- மதிப்புள்ள ஹான்ஸ் பாக்கெட் – 120 கிலோ, கூல் லீப் – 10 கிலோ மற்றும் விமல் பான்மசாலா – 17 கிலோ ஆக 147 கிலோ குட்கா பொருட்கள் இருந்தன. அந்த காரை ஓட்டி வந்த தேவா @ தேவராஜ், 42/24, ஆண்டிபாளையம், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
சிறப்பாக பணிபுரிந்து தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை கைப்பற்றியமைக்காக நெடுஞ்சாலை ரோந்து பணியில் இருந்த காவலர்களை கரூர் மாவட்ட எஸ்.பி.பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டினார். மேலும் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை யாரேனும் விற்பனை செய்வதாக தெரியவந்தால் உடன் கரூர் மாவட்ட காவல் காண்காணிப்பாளர் தொலைபேசி எண்.9442149290-ல் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.