பிப்.7.
கரூர் _வீரராக்கியம் ரயில் நிலையத்திற்கு இடையே அமராவதி ஆற்றுப் பாலத்தில் மேல் அமைந்துள்ள கரூர் திருச்சி ரயில் தண்டவாளம் பாதையில் பெயர் விலாசம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் அவ்வழியே சென்ற ஏதோவொரு ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
மயிலாடுதுறையில் இருந்து கோயம்புத்தூர் வரை செல்லும் விரைவு வண்டியின் லோகோ பைலட் மேற்படி சம்பவ இடத்தில் ஒரு ஆண் அடிபட்டு தண்டவாளப் பாதையில் கிடப்பதாக வாக்கி டாக்கி மூலம் கரூர் நிலைய அதிகாரிடம் தகவல் தெரிவித்தார். மேற்படி சம்பவ இடத்திற்கு கரூர் ரயில்வே போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ் சென்று பார்த்ததில் அமராவதி ஆற்றுப்பாலத்தின் மேல் அமைந்துள்ள கரூர்- திருச்சி ரயில் தண்டவாளப்பாதையில் மேற்படி நபர் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். பிரேதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.