டிச.29.
கரூர் மோகனூர் வாங்கல் சாலையில் இருந்து வெங்கமேடு பகுதிக்கு வருவதற்கு புதிய சாலை அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை நீ கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. காமதேனு நகர் வழியாக கரூர் வெங்கமேடு வந்து எளிதாக செம்மடை பைபாஸ் சாலைக்கு செல்லலாம். இச்சாலை வெங்கமேடு பகுதியில் இணைக்கும் வகையில் ரூ.13 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. இணைப்பு சாலையை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து அச்சாலை வழியே செல்லும் முதல் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்..
வாங்கல் குப்புச்சிபாளையம் ஊராட்சியில் ரூ.39.95 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கிராம செயலக கட்டடம். கரூர் மாநகராட்சி மண்டலம்-1 வார்டு 10. என்.எஸ்.கே நகர்பகுதியில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சுகாதார வளாகம், 13-வது வார்டு சணப்பிரட்டி பகுதியில் ரூ.25.இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சுகாதார மையம்.34-வது வார்டு காமராஜ் சாலையில் இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், வார்டு எண்.36. திருமாநிலையூர் புதிய பாலம் அருகே ரூ.36.30 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய கழிப்பிட கட்டடம்,. 48-வது வார்டு காளியப்பனூர் பகுதியில் ரூ.7.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சி ஜீவா நகரில் ரூ.7.85 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய சுகாதார வளாகம். மொச்சக்கொட்டாம்பாளையம் பகுதியில் ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 60.000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி, வேப்பம்பாளையம் காலனி பகுதியில் ரூ.28.74 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய கூடம் என மொத்தம் ரூ14.97 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களையும்.
42-வது வார்டுக்குட்பட்ட தென்றல் நகரில் ரூ.16.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள மழைநீர் வடிகால் கட்டுமானப் பணி, ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சி, கோவிந்தம்பாளையம் ரூபி கார்டனில் ரூ.4.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள கழிவுநீர் வடிகால் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளை துவக்கி வைத்தார்.
மேலும், ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சி, குடித்தெரு மயானத்திற்கு ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சுற்றுச்சுவர், எரிமேடை மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளையும் என மொத்தம் ரூ.15.27 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட புதிய கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார்.
மேலும், நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மூலம் கோதூரில் புதிய முழுநேர நியாவிலைக் கடையை திறந்துவைத்து முதல் விற்பனையை தொடங்கிவைத்தார். பின்னர் ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சி ஆத்தூர் பிரிவு பகுதியில் புற காவல்நிலையத்தை திறந்துவைத்தார்.
இத்நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி. பெரோஸ் கான் அப்துல்லா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர்.ப.சரவணன், மாநகராட்சி ஆணையாளர் சுதா, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் கந்தராஜா, மாவட்ட வழங்கல் அலுவலர் மரு.சுரேஸ், உதவி இயக்குநர்ஊராட்சிகள் சரவணன். கரூர் ஆர்டிஓ முகமதுபைசல், டிஎஸ்பி.செல்வராஜ், மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவர்கள் கனகராஜ், ராஜா. சக்திவேல், அன்பரசன், தாந்தோணி ஊராட்சி ஒன்றிய சேர்மன் சிவகாமி. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சுவாதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் வசந்தி(வாங்கல் குப்புச்சிபாளையம்), பெரியசாமி ஆண்டாங்கோவில் மேற்கு) மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.