நவ.10.
படத்தில் காணும் ஆண் குழந்தை கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியம், காவல்காரன்பட்டி பகுதியில் கடந்த 11.06.2024 அன்று பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு திருச்சி அண்ணல்காந்தி நினைவு அரசு தலைமை மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து குழந்தைகள் உதவிமையம் மூலமாக திருச்சிராப்பள்ளி குழந்தைகள் நலக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டது. அக்குழந்தைக்கு இராம்குமார் என்று பெயரிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தைகள் நலக்குழுவின் தற்காலிக பராமரிப்பு ஆணை வாயிலாக பெரம்பலூர் நல்ல ஆலோசனை மாதா அன்பு இல்லம் சிறப்பு தத்துவள மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இக்குழந்தையை பற்றிய விவரங்கள் மற்றும் பெற்றோர் அல்லது உறவினர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால் இவ்வறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் கரூர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகிற்கு தெரிவிக்கலாம். மேலும், குழந்தையை உரிமைகோரி எவரும் தொடர்பு கொள்ளாத நிலையில், குழந்தையை சட்டப்படி தத்து கொடுப்பதற்கு தடையில்லாசான்று வழங்கப்படும் என்று கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
தொடர்புகொள்ளவேண்டியமுகவரி-
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, எண்:13 சாமிகாம்பிளக்ஸ், ஆர்டிஓ அலுவலகம் எதிரில், மாவட்ட ஆட்சியரகம்.கரூர் மாவட்டம்.
04324-296056 8903331098.