அக்.27.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ளது அரசம்பாளையம். இக்கிராமத்தில் தனி நபருக்கு சொந்தமான முருங்கை தோட்டம் உள்ளது. இந்த நிலத்தில், விவசாய பணி நடைபெற்றது. நிலத்தை சீரமைத்தனர். அப்போது பெரிய பாறை போன்ற கல் தென்பட்டது. அதனை அறிந்த சிவனடியார்கள் ஒன்று சேர்ந்து ஆழமாக தோண்டி பார்த்தனர். அங்கு பழமையான சிவலிங்கம் தென்பட்டது. அது ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் என்பது தெரியவந்தது.
காட்டுத்தீ போல பரவிய இந்த தகவலை அறிந்து பொதுமக்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர். சிவலிங்கத்தை வணங்கி பரவசமடைந்து வருகின்றனர்.












