டிச.21.
விவசாயிகள் மற்றும் சாதாரண மக்கள் வங்கி கடனை திருப்பி செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் தொழில் அதிபர்கள் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் உள்ள நிலுவைத் தொகை தொகை குறித்து நாடாளுமன்றத்தில் அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதில் 50தொழிலதிபர்கள் மட்டும் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்த தொகை ரூ. 92570 கோடி என மத்திய அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் கடன் வாங்கிய 50 தொழிலதிபர்கள் கடனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. 50 பேர் திருப்பி செலுத்தாத தொகை 92 ஆயிரத்து 570 கோடி என ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.