ஏப்.19.

நாடாளுமன்ற பொது தேர்தலில் கரூர் எம்பி தொகுதி வாக்குப்பதிவு இன்று அமைதியாக நடைபெற்றது. 1670 வாக்குபதிவு மையங்களில் வாக்காளர்கள் வாக்களித்தனர்.
தேர்தல் பணியில் 9073 அலுவலர்கள் மற்றும் 1.839 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வாக்குப்பதிவிற்காக 8000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2000 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2167 வாக்கினை சரிபார்க்கும் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குப்பதிவு சதவீதம்-
கரூர் எம்.பி. தொகுதிக்குட்பட்ட கரூர் சட்டமன்ற தொகுதியில் 269 வாக்குச்சாவடிகள். பதிவான வாக்குகள் 80.91 சதவீதம்.
கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 260 வாக்குச்சாவடிகள். பதிவான வாக்குகள் 82.66 சதவீதம்.
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 253 வாக்குச் சாவடிகள். பதிவான வாக்குகள் 78.84 சதவீதம். மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் 324 வாக்குச்சாவடிகள். பதிவான வாக்குகள் 75.97 சதவீதம்.
விராலிமலை சட்டமன்ற தொகுதியில் 255 ஊக்குச்சாவடிகள். சதவீதம் 80.49. வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் 309 வாக்குச்சாவடிகள். பதிவான வாக்குகள் 74:44 சதவீதம்.
ஒட்டுமொத்தமாக கரூர் எம்பி தொகுதியில் மொத்தம் 1670 வாக்குசாவடிகள். பதிவான வாக்குகள் 78.61 சதவீதம். தேர்தல் அதிகாரியும் கரூர் மாவட்ட கலெக்டருமான தங்கவேல் இதனை தெரிவித்துள்ளார்.
வெளியீடு செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்எரூர் மாவட்டம்