ஜன.16.
https://www.facebook.com/share/12CNibxecXR
கரூர் மாவட்டம். குளித்தலை வட்டம் இராச்சாண்டார் திருமலையில் இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டியினை அமைச்சர் செந்தில் பாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் விவசாயிகளின் நலன் காக்கும் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்யும் விதமாகவும். விவசாயிகள் தங்களுடைய கால்நடைகளை போற்றும் விதமாகவும் பொங்கல் திருநாளாம் தமிழர் திருநாளையொட்டி குளித்தலை வட்டம் இராச்சாண்டார் திருமலையில் 63 வது ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.
இன்றைய ஜல்லிக்கட்டுப் போட்டியில் 770 காளைகளும். 400 மாடுபிடி வீரர்களும் அரசு விதிமுறைகளின்படி பதிவு செய்து பங்கேற்றுள்ளனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் சார்பாக சிறந்த காளைக்கு கார் பரிசாகவும். சிறந்த மாடுபிடி வீரருக்கு இரு சக்கர வாகனம் பரிசாகவும் வழங்கப்பட உள்ளது.
ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள். பார்வையாளர்கள் மற்றும் காளைகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதென அமைச்சர் தெரிவித்தார். முன்னதாக அமைச்சர் தலைமையில் மாடுபிடி வீரர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டு விதிமுறைகள் குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இவ்விழாவில் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம். மாவட்ட எஸ்பி . பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், குளித்தலை சார் ஆட்சியர் சுவாதி ஸ்ரீ. இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்பு) டாக்டர் சாந்தி, தாசில்தார் பரிதி, ஜல்லிக்கட்டு போட்டி குழுவினர் கலத்து கொண்டனர்.