ஜூன்.16.
கரூர் கொங்கு திருமண மண்டபத்தில் கரூர் மாவட்ட திமுக சார்பில், கல்வி மற்றும் மருத்துவம் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வி.செந்தில்பாலாஜியிடம் உதவி கோரி மனு அளித்த 608 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 59 லட்சம் மதிப்பிலான கல்வி நிதி உதவிகள் மற்றும் மருத்துவ நிதி உதவிகளை வழங்கினார். தனித்தனியாக மேடைக்கு அழைத்து பகுதி வரியாக ஒவ்வொருவருக்கும் செந்தில் பாலாஜி நிதி உதவியை வழங்கினார்.
நூற்றுக்கணக்கானோர் பயன்பெற்ற இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், மாநகர செயலாளர் கனகராஜ், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.