செப்.26.
கரூர் என்.எஸ்.என் பொறியியல் கல்லலூரியில் மாபெரும் கல்விக்கடன் முகாம் நடைபெற்றது. கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் பேசுகையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசுப்பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவ மாணவியரின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். சாதணையாளர்களாக உருவாக்கிடவும், .அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திடவும். புதுமைப் பெண் மற்றும் தமிழ் புதல்வன் என்ற இரு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.
மேலும், பள்ளிப் படிப்பை முடித்து உயர்கல்வி செல்வதற்காக கல்லுரி கனவு என்னும் நிகழ்ச்சி மூலம் மணவ, மாணவியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்காக மாதம் ரூ.7000/-வழங்கும் திட்டம் மற்றும் உயர்கல்வி பயிலும் மாணயிகளுக்கு புதுமை பெண் திட்டத்தின் மூலம் மாதம் ரூ. 1000/- வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே. மாணவர்களாகிய நீங்கள் உயர்கல்வியை நன்றாக படித்து தகுதியான வேலைகளில் சேர வேண்டும். படிக்கும் காலத்தில் திறமையாக செயல்பட வேண்டும். உருவாக்கிக் கொள்ள வேண்டும் உங்களுடைய கல்லூரிக் காலத்தை படிப்பிற்கும் வாழ்க்கையின் உயர்விற்கும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கவனச் சிதறல்கள் இல்லாமல் நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
கல்விக்காக பொருளாதாரத்தை எந்த பெற்றோரும் சுமையாக கருதக்கூடாது என்பதற்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக உயர்கல்வி பயில்வதற்காக கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் நோக்கம், கல்வி பயில பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதே ஆகும்.
அந்த வகையில், இன்றைய தினம் 111 மாணாக்கர்களுக்கு ரூ.6.52 கோடி மதிப்பீட்டில் உயர்கல்வி பயில்வதற்கான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அறிவு வளர்ச்சிக்கும், சமூக வளர்ச்சிக்கும் பெருமளவில் உதவி செய்யும் இத்திட்டத்தினை நன்கு பயன்படுத்திக் கொண்டு தங்கள் வாழ்வில் முன்னேறவேண்டும் என்றார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் வி.டி.பானி, தனித்துணை ஆட்சியர் பிரகாசம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வசந்தகுமார், மாணவ, மானாவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.