நவ.10.
கரூர் மாவட்டம் கோடங்கிப்பட்டியிலுள்ள ஒயசீஸ் ஜவுளி பூங்காவில் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளையும், புலியூர் காளிபாளையத்தில் ரங்கா பாலிமர்ஸ் நிறுவனத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களை அரைக்கும் பணி, காக்காவாடியிலுள்ள VMD ஜவுளி பூங்காவில் நடைபெற்றுவரும் கட்டுமான பணிகள், ரங்கா பாலிமர்ஸ் நிறுவனத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களை அரைத்து அதில் நூல் உற்பத்தி செய்து அதன் மூலம் தயார் செய்யப்பட்டு வரும் ஜவுளி ரகங்களை அமைச்சர் செந்தில்பாலாஜி, கைத்தறி துணிநூல் அமைச்சர்0காந்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
செல்தில்பாலாஜி தெரிவித்ததாவது.
முதலமைச்சர் அவர்கள் அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பான நிருவாகத்தை வழங்கி வருகிறார்கள். அதன்படி தமிழ்நாடு இந்திய அளவில் முதம்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக சிறப்பான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.
அதனடிப்படையில் இன்றைய தினம் கரூர் மாவட்டத்திலுள்ள ஜவுளி பூங்காக்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் புணரமைப்பு பணிகள், உற்பத்தி செய்யும் ஜவுளி ஆடைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கரூர் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள எம்.எம்.76 கரூர் தொழிலியல் நெசவாளர் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான 3.66 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் அமைந்துள்ள தொழிற்கூட கட்டிடத்தில் கரூர் சரகத்திற்கான சிறிய அளவிலான கைத்தறி பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக இத்தொழிற்கூடத்தில் 40 தறிகள் நிறுவிட திட்டமிடப்பட்டு, இப்பூங்கா அமைப்பதற்காக தொழிற்கூட புணரமைப்பு பணிக்கு ரூ.27.57 இலட்சம் மதிப்பீட்டிலும், தறிகள் மற்றும் உபகரணங்கள் கொள்முதலுக்கு ரூ 36.50 இலட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் வருடாந்திர பராமரிப்பு செலவினம் (ஒரு வருடத்திற்கு) ரூ.8.60 வகையில் செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசின் முதல் தவணை மானியத்தொகை ரூபாய் 75 இலட்சம். ஓயாசிஸ் டெக்ஸ்பார்க் நிறுவனத்திற்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் ஜவுளித்தொழிலின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும். ஜவுளித் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையிலும். சிறிய அளவிலானஜவுளிப்பூங்கா திட்டத்தின் மூலம் தொழில் முனைவோருக்கு தகுதியான திட்டத்தொகையில் 50 விழுக்காடுத் தொகை, அதிகபட்சமாக ரூ.2.50 கோடி அளவிற்கு தமிழ்நாடு அரசின் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு ஜவுளிப் பூங்காக்கள் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலத்தையும். 3 தொழில் கூடங்களையும் கொண்டதாக இருக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அரசு செயலர் (கைத்தறி, கைத்திறன். துணி நூல் மற்றும் சுதர் துறை) அமுதவல்லி, ஜவுளித்துறை இயக்குனர் லலிதா, கலெக்டர் தங்கவேல், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி,எஸ்.பி. பெரோஸ் கான் அப்துல்லா, எம்.எல்ஏக்கள் மாணிக்கம் (குளித்தலை). இளங்கோ (அரவக்குறிச்சி), சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன். துணை தாரணி.சரவணன், மாநகராட்சி ஆணையர் சுதா, மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் கனகராஜ், கோல்டுஸ்பாட் ராஜா, சத்திவேல் உதவி இயக்குநர்(கைத்தறி) சரவணன், துணை இயக்குநர் (டெக்டைல்ஸ்), தமிழ்செல்வி. ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் மற்றும் துணைத் தலைவர்
திருப்ரித்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.