ஜூலை.12.
2023-2024-3 நிதியாண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் நலத் துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 05-வகை நலத் திட்டங்களுக்கு இ.சேவை இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்டஆட்சித்தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர்.இ.ஆ.ப., அவர்கள் தகவல்
தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் செயல்படுத்தப்படும் இசேவை இணையதளம் வாயிலாக மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்து பெறும் விதமாக கரூர் மாவட்டத்தைச் சார்ந்த மாற்றத்திறனாளிகள் கீழ்காணும் 05யகை நலத்திட்டங்களுக்கு இந்த இணையதளத்தில் அதிகளவில் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்து பயன்பெறும் விதமாக இத்திட்டப் செயல்படுத்தப்படவுள்ளது.
இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டிய 05- வகை நலத்திட்டங்கள்:
1- கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்.
2)உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டம்.
3) சுயதொழில் வங்கிக் கடன் மானியம் வழங்கும் திட்டம்.
4) திருமண நிதியுதவி வழங்கும் திட்டம்.
5) மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம்.
மேற்காணும் திட்டங்களுக்கு இந்த சேவைகளை பொதுமக்கள் தங்கள் அருகாமையிலுள்ள இ.சேவை மையம் அல்லது https:/www./tnesevai.tn.gov.in/citizen/registration.aspxf. என்ற இணையதளம். மூலம் மட்டுமே விண்ணப்பித்து பயன் பெறலாம். ஜீலை மாதம் இறுதி வரை மட்டுமே விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாகவும் நேரடியாகவும் பெறப்படும். மேலும் இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம். மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம், கரூர் (தொலைபேசி 04324-257130) என்ற முகவரியில் அணுகி பயன்பெறலாம், விபரமறிந்து பயன்பெற்ற மாற்றுதிறனாளிகள் மற்றும் பொதுமக்கள் பிறருக்கும் பயன்படும் வகையில் சமூக வலை தளங்களின் இவ்விபரங்களை பதிவிட்டு அதிகளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுமாறு கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.