மார்ச்.26.
முன்னாள் முதலமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் எம்பி தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார் தேசிய ஜனநாயக கூட்டணியில் சீட் ஒதுக்கினாலும் சிகிச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளராக தற்போதைய எம்பி நவாஸ் கனியும், அதிமுக சார்பில் ஜெயபெருமாளும் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் ஓ பன்னீர்செல்வம் என்கிற பெயரில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட 4 பேர் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
ஒரே பெயரைக் கொண்ட ஐந்து நபர்கள் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளதால் ராமநாதபுரம் தொகுதி வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.