நவ.18.
கரூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி 5 புதிய பேருத்துகளை அதற்குரிய வழித்தடத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். எம்எல்.ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் முன்னிலை வகித்தனர்.
கரூர் மண்டலம் சார்பாக கரூர் 1. கரூர் 2, மற்றும் அரவக்குறிச்சி கிளைகளில் பழைய பேருந்துகளுக்கு பதிலாக புதிதாக பதிவு செய்யப்பட்ட 2 நகர் மற்றும் 3 புறநகர் பேருந்துகளை அதன் வழித்தடத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்து பேருந்துகளை பார்வையிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், துணை மேயர் சரவணன்.பொது மேலாளர் சிவசங்கரன், மண்டல மேலாளர் ஜேசுராஜ், மாநகராட்சி ஆணையர் சுதா, வருவாய் கோட்டாட்சியர் முகமதுபைசல், மண்டல குழுத் தலைவர்கள் கனராஜ். அன்பரசன். .ராஜா, சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.