பிப்.28.
ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சாவை விற்பனைக்காக வாங்கி சேலத்திலிருந்து கரூர் வழியாக மதுரை செல்லும் பேருந்தில் கொண்டு செல்வதாக கரூர் மாவட்ட எஜஸ்.பி. பெரோஸ் கான் அப்துல்லாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கரூர் நகர காவல் நிலைய சரகம் கரூர் to மதுரை தேசிய நெடுஞ்சாலை திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகிலுள்ள சர்வீஸ் ரோடு அருகில் கரூர் மாவட்ட ரவுடிகள் தடுப்பு பிரிவு (Anti-Rowdy Team) சப்இன்ஸ்பெக்டர் அகிலன் தலைமையில் தனிப்படையினர் பேருந்தை சோதனை செய்தனர்.
அந்தப் பேருந்தில் சந்தேகத்திகத்திற்கிடமான வகையில் பயணம் செய்த 1. நாகேந்திரன் @ ரகு 29/25, த/பெ. நாகராஜன், சிலம்பு தெரு, சமத்துவபுரம், காரியாபட்டி, விருதுநகர் மாவட்டம். 2. ராம்குமார், 24/25, த/பெ. முத்துக்குமார், கோட்டை தெரு, திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம் தற்போது ஆவியூர், அரசகுளம், காரியாபட்டி, விருதுநகர் மாவட்டம், 3. செந்தில்குமார் 24/25, த/பெ.ஆறுமுகம், சாமியார் பிள்ளை சந்து, திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம், 4. யோகேஸ்வரன், 20/25, த/பெ. மாரிமுத்து, நாகுபிள்ளை தோப்பு, சிந்தாமணி ரோடு, மதுரை மாவட்டம், மற்றும் 5.நவீன்ராஜ் 20/25, த/பெ. பாக்கிய அந்தோணி, மதர் தெரசா பள்ளி பின்புறம், அனுப்பானடி, மதுரை மாவட்டம் ஆகியோர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
கஞ்சாவை விற்பனைக்காக ஆந்திரா மாநிலத்திலிருந்து வாங்கி அங்கிருந்து ரெயில் மூலம் சேலம் வந்து, அங்கிருந்து பேருந்து மூலம் மதுரை கொண்டு செல்வதாக தெரிவித்தனர். பின்பு அவர்களிடமிருந்து ரூபாய் 1,20,000/- மதிப்புள்ள 12 கிலோ கஞ்சாவை கைப்பற்றி பின்னர் கரூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு மேற்படி நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டனர். மேற்படி நபர்கள் மீது ஏற்கனவே மதுரை, விருதுநகர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி கஞ்சாவை கடத்தி வந்த எதிரிகளை பிடித்த கரூர் மாவட்ட ரவுடிகள் தடுப்பு பிரிவினரை (Anti-Rowdy Team) கரூர் மாவட்ட எஸ்.பி பெரோஸ் கான் அப்துல்லா பாராட்டுகள் தெரிவித்தார்.