செப்.21.
கரூர் தாந்தோணி அரசு கலை கல்லூரியில் கரூர் கோட்டத்திற்கு உட்பட்ட மாணவர்களுக்கான ‘உயர்வுக்கு படி’ நிகழ்ச்சி 2 ம் கட்டமாக மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. கலெக்டர் பேசுகையில்,
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் பள்ளி கல்லூரி மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் படிப்பில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் வெற்றியாளர் ஆக்கும் வகையில் திறன் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய நான் முதல்வன் என்கிற புதுமைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக உயர்வுக்குப் படி என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு. அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023 மற்றும் 2023-2024-ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு பயின்று உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்காக உயர்வுக்குப் படி” எனும் நிகழ்ச்சி வருவாய் கோட்டம் வாரியாக 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக கடந்த 09.09.2024 கரூர் வருவாய் கோட்டத்திற்குட்டப்பட்ட அரசு, அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் மாணாக்கர்களுக்கான உயர்வுக்குப் படி நிகழ்ச்சியின் மூலம் 370 மாணக்கர்களும், குளித்தலை கோட்டத்தில் கடந்த 13.08.2024 அன்று நிகழ்ச்சி நடத்தப்பட்டு 68 மணக்கர்களும்
அதனைத்தொடர்ந்து. இரண்டாம் கட்டமாக இன்று 19.09.2024 கரூர் கோட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி மூலம் 16 மாணக்கர்களும் என மொத்தம் 454 மாணாக்கர்களுக்கு உயர்கல்வி பயில சேர்க்கை ஆணை வழங்கப்பட்டுள்ளன. பொருளாதார சூழ்நிலை கல்விக்கடன், கலந்தாய்வு மூலம் படிக்க இயலாத மாணவர்களின் விவரங்களை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மூலம் தொடர்பு கொண்டு நடைபெறுகிறது. உயர்கல்வி வழிகாட்டுதல்கள் மற்றும் கல்விக் கடன் தேவைப்படுவோருக்கு வங்கிகள் மூலம் தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
எந்தெந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளது, மேற்படிப்பை தொடர ஆலோசனை வழங்கப்படுகிறது. தேவைப்படும் சான்றிதழ் வழங்க
தேவைப்படும் சான்றிதழ்கள் வழக்குவதற்காக வருவாய்த்துறை சார்பில் சேவை அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது.