.மே.15.
கரூர் மாவட்டம், குளித்தலை உட்கோட்டம், லாலாபேட்டை காவல்சரகம் பூஞ்சோலைப்புதூரைச் சேர்ந்த பள்ளி மாணவி சேங்கல், பாப்பிரெட்டிபட்டி தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்ற போது அப்பள்ளியில் பணிபுரிந்த தமிழ் ஆசிரியர் நிலவொளி, (42),பார்வதிபுரம், முசிறி, திருச்சி மாவட்டம் மற்றும் பள்ளியின் தாளாளர் யுவராஜ், (41), காந்தி நகர், சத்திரப்பட்டி, ஆலம்பாடி, குஜிலியம்பாறை, திண்டுக்கல் மாவட்டம் ஆகியோர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக லாலாபேட்டை காவல் நிலையத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு போக்சோ சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணைக்காக குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.
தொடர்ந்து இவ்வழக்கின் எதிரிகளான 1.நிலவொளி, 2.யுவராஜ் ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, கரூர் கூடுதல் அமர்வு மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று, இன்று எதிரிகளான 1.நிலவொளி என்பவருக்கு போக்சோ குற்றத்திற்காக 43 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1000/- அபராதமும், எதிரி 2.யுவராஜ் என்பவருக்கு போக்சோ குற்றத்திற்காக 23 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1000/- அபராதமும் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7,00,000/- நிவாரணம் அளிக்க மாண்பமை நீதிபதி தங்கவேல், கரூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் (மகிளா நீதிமன்றம்) தீர்ப்பளித்தார்.
மேற்கண்ட வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை துப்பாக்கி ஏந்திய போலீசார் வழிக்காவல் மூலம் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வழக்கில் சிறப்பாக புலன்விசாரணை செய்தும், சாட்சிகளை முறையாக ஆஜர்படுத்தி எதிரிகளுக்கு கடுங்காவல் தண்டனை பெற்று தந்த புலன் விசாரணை அதிகாரிகளான இன்ஸ்பெக்டர்கள் மங்கையர்கரசி (தற்போது திருச்சி மாவட்டம்) கலைவாணி, குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் நீதிமன்ற காவலர் சண்முகபிரியா ஆகியோரை கரூர் மாவட்ட எஸ்.பி.பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டினார்.