மே.15.
கரூர் மாவட்டத்தில் முறையாக பைனான்ஸ் தொழில் விதிமுறைகளை பின்பற்றாமல் பொதுமக்களுக்கு அதிக பணம் கொடுத்து வசூல் செய்து அவர்களை துன்புறுத்தியவர்கள் மீது கரூர் நகரம், பசுபதிபாளையம் மற்றும் வெங்கமேடு காவல் நிலையங்களில் Tamil Nadu Charging of Exorbitant Interest Act 2003 (தமிழ்நாடு வரம்பிகந்த வட்டி விதிப்பு தடுப்புச் சட்டம் 2003) படி வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட 04 எதிரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கடந்த வாரம் பத்திரிக்கை செய்தி வாயிலாக முறையாக விதிமுறைகளை பின்பற்றாமல் பைனான்ஸ் தொழில் செய்யும் நிதி நிறுவனங்கள், தனி நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியிருந்தார். மேலும் பொதுமக்களுக்கு கந்துவட்டி தொடர்பாக தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் அலுவலக தொலைபேசி எண். 100 அல்லது 04324 296299 என்ற எண்ணிற்கோ நேரடியாக தகவல் தெரிவிக்கலாம் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் பொதுமக்கள் அளித்த புகார் அடிப்படையின் மேற்குறிப்பிட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தொடர்புடைய எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கந்து வட்டி வசூல் செய்தால் அவர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள் என மாவட்ட எஸ்.பி. முனைவர் K.பிரபாகர் எச்சரித்துள்ளார்.