ஜூலை.16.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுவர் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்தி தொடங்கிவைத்தவையொட்டி, கரூர் மாவட்டம். மண்மங்கலம் வட்டம். நெரூர் வடபாகம், புனித மரியன்னை அரசு உதவி பெறும் தொடக்க பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் துவக்கி வைத்தார்.
கரூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அரசு துவக்கப்பள்ளிகளில் முதன் முறையாக கிருஷ்ணராயபுரத்தில் கடந்த 15.09.2022 அன்று 77 அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 3,330 மாணவர்கள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்டு. அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் சத்தான காலை உணவு வழங்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மேலும் கடந்த 25.08.2023 அன்று 628 அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 26792 மாணவர்கள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது. மொத்தம் 705 அரசு தொடக்கப்பள்ளிகளில் 30,144 மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர்.
தற்போது முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு நிதியுதவி பெறும் பள்னிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் வகையில் தொடங்கி வைத்ததை அடுத்து கரூர் மாவட்டத்தில் 24 அரசு நிதியுதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் 1677 மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் விரிவுப்படுத்தப் பட்டுள்ளது. ஆக மொத்தம் கரூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் 35,151 துவக்கப்பள்ளி மாணவ, மாணவியர்கள் பயன் பெறுகிறார்கள் என கலெக்டர் தெரிவித்தார்.
கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் சரவணன், மகளிர் திட்ட இயக்குனர் சீனிவாசன், கூட்டுறவு சங்ககளின் இணை பதிவாளர் கந்தராஜா, மாவட்ட சத்துணவு அலுவலர் தேன்மொழி உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.