டிச.6.
திமுக இளைஞர் அணி செயலாளர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்ட அளவில் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. மாணவிகளுக்கான விளையாட்டு போட்டியில் நடைபெற்ற நிலையில் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டியை கரூர் மாவட்ட கழகம் சார்பில், மாவட்ட செயலாளரும், மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான வி.செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். போட்டிகளில் 3 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்று விளையாடினர்.
இதே போன்று தடகளப் போட்டிகளும் நடைபெறுகின்றன. 11ம் தேதி ( சனிக்கிழமை) மாணவிகளுக்கான தடகள போட்டிகளும் 12ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), மாணவர்களுக்கான தடகள போட்டிகளும் திருவள்ளூர் விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகின்றது. மாணவிகள் மாணவர்களுக்கு தனித்தனியாக 14 வயதுக்குட்பட்டவர், 17 வயதுக்குட்பட்டோர், 19 வயதுக்குட்பட்டோர் பட்டோர், கல்லூரி அளவில் குழுப் போட்டிகள் நடைபெறுகின்றன.
கபாடி, கோகோ, வாலிபால், எறிபந்து, கூடைப்பந்து, போட்டிகள் ஒவ்வொரு பிரிவுக்கும் நடைபெற்று தனித்தனியாக முதல் இரண்டாம் மூன்றாம் பரிசுகள் என வழங்கப்படுகின்றன. வீரர்கள் மற்றும் ஐந்து வீராங்கனைகளுக்கும் அதிக புள்ளிகள் பெற்ற ரெண்டு பள்ளி மற்றும் இரண்டு கல்லூரிக்கும் என 14 பரிசு கோப்பைகள் சிறப்பு பரிசாக வழங்கப்படும் தடகளப் போட்டியில் அதிக புள்ளிகள் பெறும் பள்ளி மற்றும் கல்லூரிக்கு தலா ஒரு கோப்பை வீதம் 2 கோப்பைகள் என அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்குகிறார்