பிப்.1.
கரூர் மாவட்டம் வழியாக பெங்களூரிலிருந்து கார் மூலம் விற்பனைக்காக குட்கா பொருட்களை கடத்தி வருவதாக கரூர் மாவட்ட எஸ்.பி.க்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வெங்கமேடு காவல் சரகம், சின்னகுளத்துப்பாளையத்தில் கரூர் நகர உட்கோட்ட டி.எஸ்.பி. செல்வராஜ் தலைமையில் கரூர் நகர உட்கோட்ட கஞ்சா, குட்கா தடுப்பு தனிப்படையினரான எஸ்.ஐ. உதயகுமார், தாந்தோணிமலை எஸ்.எஸ்.ஐ. செந்தில்குமார், கரூர் நகர, வெங்கமேடு காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் மற்றும் காவலர்களுடன் வாகன சோதனை நடத்தினர்.
அவ்வழியாக GJ 27 BS 4616 (Maruti Swift) என்ற குஜராத் மாநில பதிவு எண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்த போது அந்த காரில் அரசால் தடைசெய்யப்பட்ட சுமார் ரூபாய் – 1,34,242/- மதிப்புள்ள ஹான்ஸ் பாக்கெட் – 92.800 கிலோகிராம், கூல் லீப் – 19.150 கிலோகிராம், விமல் பான்மசாலா – 45.900 கிலோகிராம் மற்றும் V1 பாக்கு – 10.150 கிலோகிராம் உட்பட மொத்தம் 168 கிலோகிராம் குட்கா பொருட்கள் இருந்தன. அவற்றை கைப்பற்றியும், அந்த காரில் வந்த 1.கேவர்சன், 40/25, த/பெ.லால்சின், ஜலார், ராஜஸ்தான் மாநிலம் 2.சுரேஷ், 19/25, த/பெ.ஹரிராம், ஜலார், ராஜஸ்தான் மாநிலம் மற்றும் மேற்படி நபர்களுடன் தொடர்புடைய 3.ஹரிராம், 27/25, த/பெ.கபுரா ராம், ஜலார், ராஜஸ்தான் மாநிலம் ஆகியோரை கைது செய்து வெங்கமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
சிறப்பாக பணிபுரிந்து விரைவாக தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை கைப்பற்றி குற்றவாளிகளை கைது செய்தமைக்காக கரூர் நகர உட்கோட்ட கஞ்சா, குட்கா தனிப்படையினரை கரூர் மாவட்ட எஸ்.பி.பெரோஸ் கான் அப்துல்லா, வெகுவாக பாராட்டினார்.
கரூர் மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை யாரேனும் விற்பனை செய்வதாக தெரியவந்தால் உடன் கரூர் மாவட்ட காவல் காண்காணிப்பாளர் அலுவலக தொலைபேசி எண். 9498100780 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என எஸ்.பி. பெரோஸ் கான் அப்துல்லா, தெரிவித்துள்ளார்.