நவ.15.
கரூர் அருகே வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட மூன்று தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி இறந்தனர்.
கரூர் அருகே உள்ள சுக்காலியூரில்புதிய வீடு கட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்ய மூன்று பேர் தொட்டிக்குள் இறங்கினர். அப்போது விஷவாயு தாக்கியதில்மூச்சு திணறி மயங்கி விழுந்தனர். இது குறித்து கரூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்பு சாதங்களுடன் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி மூன்று பேரையும் மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.