பிப்.13.
புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகளுக்கு அனுமதிச் சீட்டுகள் வழங்கத்தக்க வகையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய விரிவான திட்டம் 2024 தொடர்பாக வட்டாரப் போக்குவரத்து அதிகாரி மற்றும் மாவட்ட கலெக்டர் தங்கவேல், வெளியிட்டுள்ள அறிவிப்பு-
தமிழ்நாடு முழுவதும் புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்கத்தக்க வகையில், அரசினால் புதிய விரிவான திட்டம் 2024 வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில், கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்கைக்குட்பட்டு 29 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. புதிய வழித்தடங்கள் தொடர்பான விரிவான விபரங்களை கரூர் மாவட்ட அரசிதழில் வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய சிற்றுந்து வழித்தட விபரங்கள் பின்வருமாறு:
- புலியூர் முதல் வளையக்காரன்புதூர்.
- டி.வெங்கடபுரம் பிரிவு முதல் வி.எஸ்.பி கல்லூரி.
- தண்ணீர் பந்தல் புதூர் முதல் புன்னம்சத்திரம்.
4. நொய்யல் குறுக்கு சாலை முதல் பி.காளிபாளையம்.
- பரமத்தி முதல் இந்தியன் பப்ளிக் ஸ்கூல்,
- வள்ளிபுரம் முதல் வேப்பம்பாளையம்.
- புகளூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதல் புன்னம் சத்திரம்.
8.மண்மங்கலம் முதல் வள்ளியப்பம்பாளையம்.
- குந்தானிபாளையம் முதல் திருக்காடுதுறை பிரிவு.
- சர்ச் கார்னர் முதல் துவரப்பாளையம்.
- கரூர் பழைய அரசு மருத்துமனை முதல் மண்மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி
- தடாக் கோயில் பைபாஸ் முதல் ஈசநத்தம்.
- கரடிப்பட்டி முதல் அருங்கரையம்மன் கல்லூரி.
- ஈசநத்தம் முதல் வேலன்செட்டியூர்
- பள்ளப்பட்டி முதல் குரும்பப்பட்டி
- அருள்முருகன் கல்லூரி பிரிவு முதல் கொடுமுடி.
- வைரமடை முதல் முத்தூர் பஸ் நிலையம்.
- அருள்முருகன் கல்லூரி பிரிவு முதல் குருகத்தி,
- வைரமடை முதல் வெள்ளக்கோயில் அரசு மேல்நிலைப்பள்ளி.
20.பரமத்தி முதல் எல்லமேடு பிரிவு.
- ஈஸ்வரன் கோயில் பிரிவு முதல் எம். ஆலமரத்துப்பட்டி.
22 ராஜபுரம் பிரிவு முதல் வி.எஸ்.பி கல்லூரி.
23.பாளையம் பிரிவு முதல் ஈசநத்தம்.
24.கணக்கப்பிள்ளை புதூர் பிரிவு முதல் வெள்ளகோயில் அரசுப் பள்ளி.
25.அஞ்சூர் முதல் கொடுமுடி,
26.அய்யர்மலை முதல்சேங்கல் சத்தை. (மொத்த தீளmம் 24.2 கி.மீ)
- அய்யர்மலை முதல்சேங்கல் சந்தை. (மொத்த நீளம் 22.8 கி.மீ)
28.சிந்தாமணிப்பட்டி முதல் சேங்கல் சந்தை.
29.அய்யர்மலை முதல் இலாலாப்பேட்டை இரயில் நிலையம்.
மேற்கண்ட வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க விண்ணப்பிக்க விரும்புவோர் வழித்தட விபரத்தினை குறிப்பிட்டு கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் 24.02.2025 க்குள் விண்ணப்பிக்கலாம். ஒரு வழித்தடத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படும் நேர்வில் குலுக்கல் முறையில் ஒருவர் தேர்வு செய்யப்படுவர் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.