பிப்.24.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக தமிழ்நாடு முழுவதும் 1,000 முதல்வர் மருத்தகங்களை திறந்து வைத்தார். தொடர்ந்து, கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் கரூர் மாநகராட்சி, தாந்தோன்றிமலையில் முதல்வர் மருந்தகத்தில் முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
கலெக்டர் தெரிவித்ததாவது.-
முதலமைச்சர் அவர்களின் சுதந்திர தின அறிவிப்பின்படி தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்கள் கூட்டுறவு அமைப்புகள் மற்றும் மருந்தாளுநர்கள் மூலம் அரசின் மானிய வசதி மற்றும் கடன் உதவியோடு தொடங்கும் திட்டத்தினை செயல்படுத்திட கரூர் மாவட்டத்திற்கு 11 கூட்டுறவு சங்கங்களும், 16 தொழில் முனைவோர்கள் மூலம் முதல்வர் மருந்தகம் அமைக்கப்படவுள்ளது.
கரூர் மாவட்டத்தில் குளித்தலை வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கம், குப்புச்சிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், உப்பிடமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், ஈசநத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், க.பரமத்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், சிந்தலவாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கிருஷ்ணராயபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், மைலாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தோகைமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், வடசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும்,
மேலும், தனிநபர்/ தொழில் முனைவோர்கள் உள்பட மொத்தம் 27 முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்படவுள்ளது. Generic Medicine – தமிழ்நாடு மருந்து பணிகள் கழகம் (TNMSC) மூலம் (, Branded Medicines, Surgical items and other Drugs நுகர்வோர் கூட்டுறவு இணையம் (TNCCF) மூலம் மருந்து கொள்முதல் செய்யப்படும். கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.2.00 இலட்சம் மானியம் 50% உட்கட்டமைப்பு வசதிக்கு (ரூ.1.00 இலட்சம் தொகையாக வழங்கப்பட்டுள்ளது). 50% மருந்துகளாக வழங்கப்படும். தனிநபர்/ தொழில் முனைவோருக்கு ரூ.3.00 இலட்சம் மானியம் 50% உட்கட்டமைப்பு வசதிக்கு. (ரூ.1.00 இலட்சம் தொகையாக வழங்கப்பட்டுள்ளது) 50% மருந்துகளாக வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் மானியத் தொகைக்கு மேல் கூடுதலாக கடன் தேவைப்படும் பட்சத்தில் கூட்டுறவு வங்கிகளில் இணைய தளம் மூலம் விண்ணப்பித்து கடன் பெறலாம். ரூ.1.00 இலட்சம் எனில் 2 நபர் பிணையத்தின் அடிப்படையில் பெறலாம்.(வட்டி 9%). .1.00 இலட்சத்திற்கு மேல் எனில் அசையா சொத்து உமானத்தின் அடிப்படையில் பெறலாம். (வட்டி 9%) 3 முதல் 5 ஆண்டுகளில் கடனை திருப்பி செலுத்த வேண்டும்.என கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் மாணிக்கம் (குளித்தலை). இளங்கோ (அரவக்குறிச்சி), சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்). கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் கந்தராஜா, கலந்து கொண்டனர்.