ஜூன்.3.
கோரமண்டல் விரைவு ரெயில் ஒடிசா மாநிலம் பாலஷோர் அருகே சரக்கு ரெயிலுடன் மோதியதில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. இதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்தில் 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொல்கத்தா- சென்னை ரெயில் என்பதால் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து ஒடிசா முதல்வரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டறிந்தார். அப்போது தேவையான உதவிகளை தமிழ்நாடு அரசு செய்யும் என மு.க.ஸ்டாலின் ஒடிசா முதல்வரிடம் உறுதி அளித்துள்ளார்.
கோரமண்டல் ரெயில் விபத்தில் 800க்கும் அதிகமானோர் சென்னை வருவதற்கு முன்பதிவு செய்திருந்தனர் என தகவல் வெளியானது. ரெயில் விபத்து எதிரொலியாக 6 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு குழு விமானம் மூலம் ஒடிசா சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை இங்கு அழைத்து வரவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது.
ஒடிசா ரயில்கள் விபத்தில் உயிரிழப்பு 233 ஆக உயர்வு என அம்மாநில தலைமைச் செயலாளர் தெரிவித்தார். 1999 க்கு பிறகு இந்தியாவில் மிக மோசமான ரயில் விபத்து இது அதிகாரிகள் தெரிவித்தனர். ஒடிசா ரயில் விபத்து குறித்து அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் விபத்து நடந்த இடத்திற்கு இன்று காலை சென்று நிலைமை ஆய்வு செய்து வருகிறார். ஒடிசாவில் இன்றைய நாள் துக்க தினமாக அனுசரிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
ஒடிசா ரயில் விபத்து குறித்து தென்கிழக்கு கோட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையில் விசாரணை நடத்த ரயில்வே அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளத
முதலமைச்சர் . மு.க.ஸ்டாலின் நேற்று ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளதோடு.காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும், தேவைப்படின். தமிழ்நாட்டின் மருத்துவக் குழு மற்றும் இதர உதவிகளை அனுப்பி வைப்பதாகவும் ஓடிசா மாநில முதலமைச்சரிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், மீட்பு பணிகளில் உடனிருந்து தமிழ் நாட்டினருக்குத் தேவையான உதவிகளைச் செய்திட போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர். போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த், ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவர் அர்ச்சனா பட்நாயக், ஆகியோர் கொண்ட குழு விபத்து நடைபெற்ற ஓடிசா மாநிலத்திற்கு விரைந்து செல்ல முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ளார்.
இன்று ஒரு நாள் துக்கம்: அரசு நிகழ்ச்சிகள் ரத்து
இந்நிலையில் ஒடிசா இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று (3.6.2023) ஒரு நாள் மட்டும் துக்கம் அனுசரிக்கப்படும். மேலும், அரசின் சார்பில் இன்று நடைபெறயிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் ி தெரிவித்துள்ளார்.