ஜூலை.21.
தமிழகத்தில் கரூர் நகரில் இருந்து கைத்தறி மற்றும் விசைத்தறியினால் தயாரிக்கப்பட்ட துணிகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட துணிகளை இந்தியா முழுவதிலும் உள்ள நகரங்களுக்கும் கிராம பகுதிகளுக்கும் அனுப்பி வருகிறோம் மேலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம்.
தற்பொழுது கொண்டுவந்துள்ள 43-B(4) சட்டம் எம்எஸ்எம்இ வியாபாரிகளை பாதுகாக்கவே என்பதை வரவேற்க்கின்றோம். ஆனால் சில முக்கிய திருத்தங்கள் தேவை. நம் பாரதத்தில் ஜவுளி சந்தை பெரிய வியாபாரிகள் முதல் சிறு வியாபாரிகள் வரை அனைவரும் எங்கள் போன்ற உற்பத்தியாளர்களிடமிருந்து கடனாக ஜவுளியைப் பெற்று ஜவுளியை கடனாக விற்று வருகிறார்கள். 30 நாட்கள் முதல் 120 நாட்கள் வரை கடனாக பெற்று பணம் செலுத்தி வருகிறார்கள். அரசின் புதிய சட்டப்படி (CORPORATE) பெரிய வியாபாரிகள் 45 நாட்களில் பணம் கொடுத்து விடுவார்கள். இன்றைய தினம் சிறு குறு வியாபாரிகள் தான் அதிகமாக உள்ளனர்
வடமாநில வியாபாரிகள் எம்எஸ்எம்இ இல்லாத உற்பத்தியாளர்களிடம் இருந்து சரக்கு துணிகள் வாங்க ஆரம்பித்து விட்டனர். எம்எஸ்எம்இ இல்லாத நிறுவனங்களுக்கு ஆர்டர் கொடுக்கிறார்கள். இதற்கு காரணம் 43- உள்ள 3 சரத்துக்கள் A) 41- சட்டமானது 50 கோடிக்கு மேல் வியாபாரம் செய்யும் நிறுவனங்களுக்கு விதி விலக்கு டிரேடர்ஸ் நிறுவனங்களுக்கு விதி விலக்கு. C). எம்எஸ்எம்இ இல்லாத நிறுவனங்களுக்கு விதி விலக்கு. இவைகள் மூன்று சரத்துக்களை நீக்கப்பட்ட வேண்டும். அனைத்து வகையான விற்ப்பனையாளர்களுக்கும் ஒரே சட்டமாக இருந்தால் மட்டுமே அனைத்து தொழில்களும் பாதுகாக்கபடும்.
எங்களது கோரிக்கையான
- பணம் செலுத்தும் காலம் 90 நாட்கள். (Payment Time 90 Days)
- அணைத்து விதமான வியாபாரிகளுக்கும் ஒரே சட்டம் (All Types of Sale)
இந்த இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றி ஜவுளிதொழிலை பாதுகாக்குமாறு மத்திய நிதி அமைச்சருக்கு கரூர் நெசவு, உற்பத்தியாளர்கள் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.