ஜூலை.7.
கரூர் மாவட்டத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்கள் அனைவரும் 100 சதவீதம் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை மேற்கொள்ள ஏதுவாக, கரூர் மாவட்ட ஆட்சியர் வளகத்திலுள்ள ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்டத் திட்ட அலுவலகம் அறை எண். 85 -இல் உயர் கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை (District Control Room) அமைக்கப்பட்டுள்ளது.
கலை& அறிவியல் பட்டப் படிப்புகள், பொறியியல் படிப்புகள், மருத்துவப் படிப்புகள். வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த படிப்புகள். பல்வகை தொழில் நுட்ப படிப்புகள் (Polytechnic), தொழிற்பயிற்சி மையப்படிப்புகள் (ITI), ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் படிப்புகள் சார்ந்த கல்லூரிகளில் உயர்கல்வி சேர்க்கை தொடர்பாகவும். உயர் கல்வி பயில நிதி உதவி கோருதல் சார்பாகவும், கல்விக்கடன் வழங்கல் தொடர்பாகவும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நேரிலோ அல்லது 95665 66727என்ற தொலைபேசி எண்ணிற்கு காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை தொடர்பு கொண்டு பயனடையலாம் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.