ஏப்.14.
கரூர் மாவட்டம், கரூர் நகர உட்கோட்டம், பசுபதிபாளையம் காவல் சரகம், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்களாக பணிபுரியும் தட்சிணாமூர்த்தி மற்றும்கவிதா ஆகியோர் மருத்துவமனை கார் பார்க்கிங்கில் நிறுத்தி வைத்திருந்த Wagonr மற்றும் Honda City கார்கள் மாயமானது. புகாரின் பேரில் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக கரூர் மாவட்ட எஸ்.பி.பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில், கரூர் உட்கோட்ட டி.எஸ்.பி. செல்வராஜ் மேற்பார்வையில், பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மருத்துவ கல்லூரி சுற்றியுள்ள CCTV கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். சந்தேக நபரான வெங்கமேடு பெரிய குளத்துப்பாளையத்தை சேர்ந்த பாசில் (39) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். மேற்படி மருத்துவமனையில் இரண்டு கார்களை திருடியதாக ஒப்புக்கொண்டதன் பேரில் மேற்படி இரண்டு கார்கள் மீட்கப்பட்டு, வழக்கின் எதிரி பாசிலை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவல் பெற்று கரூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.
மேற்படி வழக்குகளில் CCTV மூலம் குற்றவாளியை கண்டுபிடித்து, திருடு போன இரண்டு கார்களையும் மீட்ட தனிப்படையிரை கரூர் மாவட்ட எஸ்.பி ஃபெரோஸ் கான் அப்துல்லா பாராட்டினார்.