

ஜூன்.19. கர்நாடகா மாநிலம் பெங்களூருரிலிருந்து சட்டவிரோதமாக காரில் குட்கா புகையிலை பொருட்களை கடத்தி வருவதாக கரூர் மாவட்ட எஸ்.பி.க்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கரூர் மாவட்ட ரவுடிகள் தடுப்பு பிரிவு எஸ்.ஐ.சையது அலி தலைமையில் போலீசார் குளித்தலை காவல் சரகம் சுங்ககேட் அருகே 18.06.2025 ஆம் தேதி இரவு வாகனத்தணிக்கை செய்தனர். சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த Maruti EECO கார் மற்றும் Suzuki S-Cross கார்களை நிறுத்தி சோதனை செய்ததில் சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட சுமார் ரூ.47,000/- மதிப்புள்ள 15 கிலோ எடை கொண்ட ஹான்ஸ் 04 மூட்டைகளையும், 05 கிலோ எடை கொண்ட விமல் பாக்கு 01 மூட்டையும் கைப்பற்றி காரில் வந்த 1.மணிகண்டன், 24/ இந்திராகாந்தி தெரு, பரமத்தி வேலூர், நாமக்கல் மாவட்டம், 2.கார்த்திகேயன், 42/பாண்டமங்கலம், பரமத்தி வேலூர், நாமக்கல் மாவட்டம் பிடித்து விசாரணை நடத்தினர். மேற்படி நபர்கள் கர்நாடகா மாநிலம், பெங்களூருரிலிருந்து சட்ட விரோதமாக விற்பனை செய்ய கடத்தி வந்ததாக தெரிவித்தனர். 2 கார்கள், பணம் ரூ.1,030/- மற்றும் 2 மொபைல் போன்களை கைப்பற்றி குளித்தலை இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனிடம் ஒப்படைத்தனர். மேற்படி நபர்கள் மீது குளித்தலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து குளித்தலை நீதித்துறை நடுவர்.1 முன்பு ஆஜர்படுத்தி நீதிமன்ற காவல் பெற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறப்பாக பணிபுரிந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கைப்பற்றியமைக்காக கரூர் மாவட்ட ரவுடிகள் தடுப்பு பிரிவினரை கரூர் மாவட்ட எஸ்.பி.பெரோஸ் கான் அப்துல்லா, பாராட்டினார்.












