டிச.24.
TNPSC போட்டித்தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணாக்கர்கள் தங்களுடைய சுயவிபரத்தினை சமர்ப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வெண்ணமலையில் உள்ள அலுவலகத்தில் தன்னார்வ பயிலும் வட்டத்தில் TNPSC GROUP I,II, IV TRB TNUSRB போன்ற வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதற்கு சிறப்பான பயிற்றுநர்களை தேர்வு செய்யும் நோக்கில் வரும் 31-12- 2024 ம் தேதிக்குள் தங்களது சுயவிபரம் (Bio data) குறிப்புகளுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலரை அலுவலக நாட்களில் நேரில் தொடர்புகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாய்ப்பினை தகுதியும் திறமையும் உள்ள ஆண் பெண் இருபாலர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் மேலும் விவரங்களுக்கு 94990-55912 தொலைபேசியினை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.