மார்ச்.2.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கரூர் மாவட்ட திமுகவுக்கு வீரப்பன் சத்திரம் பகுதியை தலைமை ஒதுக்கி இருந்தது. கரூர் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான செந்தில் பாலாஜி தலைமையில் கரூர் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு அதிக அளவில் வாக்குகள் பதிவானது.
அதிமுக பலமாக இருந்த வீரப்பன்சத்திரம் பகுதியில் பதிவான 16,222 வாக்குகளில், 12020 வாக்குகளை செந்தில் பாலாஜி தனது வியூகத்தினால் ஈட்டியுள்ளார். தேர்தல் வெற்றியை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெற்றிக்கு காரணமாக இருந்த திமுக தலைவரும், முதல்வருமான மு .க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்றார்.