டிச.4.
கரூர் ஜங்ஷன் ரயில் நிலையம் துவக்கப்பட்டு இன்று 154 வருடங்கள் முடிந்து, 155 வது வருடம் தொடங்குகிறது. ஸ்டேஷன் மாஸ்டர் சீனிவாசன் தலைமையில், கேக் வெட்டி, பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
கரூர் சந்திப்பை பொருத்தவரை சேலம் இருப்பு பாதை அமைக்கப்பட்ட பின்னர் நான்கு திசைகளிலும் இருந்து ரயில்கள் வந்து செல்லும் நிலையமாக மாறியுள்ளது. மேலும் கரூர் மாவட்டத்தில் பிரிடிஷ் காலத்திலேயே முதன்முதலாக 154 வருடத்திற்கு முன்பாகவே திருச்சி ஈரோடு அகலரயில் பாதையில் ஆரம்பிக்கப்பட்ட ரயில் நிலையமாக செயல்பட்டு வருகின்றது. கரூர் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து ரயில்கள் புறப்பட்டுச் செல்ல வேண்டும் என்பது பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.