அக்.19.
சட்டசபையில் ஓ பி எஸ் இருக்கையை மாற்ற கோரி சென்னையில் மறியல் போராட்டம் நடத்திய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து கரூர் மாவட்ட அதிமுக சார்பில் கரூர் பேருந்து நிலையம் அருகில்அமைப்புச் செயலாளர் சின்னசாமி, அவைத்தலைவர் . திருவிகா தலைமையில் அதிமுக அலுவலகத்தில் இருந்து பேருந்து நிலையம் வரை ஊர்வலம் சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியலில் அதிமுக வினர் 137 பேரை போலீசார் கைது தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.