ஜூன்.2.
முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு புதிய பாடநூல்கள்.சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணப்பொருட்களை வழங்கியதைத் தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் 1,29, 292 பள்ளி மாணாக்கர்களுக்கு 11 வகையான பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அக்ஷசென்னை, திருவல்லிக்கேனி லேடி வெல்லிங்டன் மேல்நிலைப்பள்ளியில் இன்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் 2025-26 ம் கல்வியாண்டிற்கான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணப்பொருட்களை வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, கரூர் மாநகராட்சி குமரன் நடுநிலைப் பள்ளியில் மாவட்ட கலெக்டர் தங்கவேல் மாணாக்கர்களுக்கு உபகரணங்களை வழங்கினார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் என 751 பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் 36.301 மாணவ, மாணவிகளும், ஆங்கில வழியில் 5,048 மாணவ, மாணவிகளும் பயின்று வருகின்றனர். அதன்படி, 1.ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ் வழியில் 36,301 பாடநூல்களும், ஆங்கில வழியில் 5.048 பாடநூல்களும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் சுயநிதி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என 140 பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் 73,827 மாணவ, மாணவிகளும். ஆங்கில வழியில் 14.116 மாணவ மாணவிகளும் பயின்று வருகின்றனர். அதனடிப்படையில், 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு தமிழ் வழியில் 73.827 பாடநூல்களும். ஆங்கில வழியில் 14,116 மாணவ, மாணவிகளும் பயின்று வருகின்றனர். அதனடிப்படையில், 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு தமிழ் வழியில் 73.827 பாடநூல்களும், ஆங்கில வழியில் 14,116 பாடநூல்களும் என மொத்தம் 890 பள்ளிகளில் பயிலும் 1.29.292 மாண மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், புத்தகப் பைகள், காலணிகள் (1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை), கால்ஏந்திகள் (6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை). காலுறைகள் (6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை) புவியியல் வரைபடம் (6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை). கிரையான் (1 மற்றும் 2ஆம் வகுப்பு) வண்ணப்பென்சில்கள் (3முதல் 5 ஆம் வகுப்பு வரை), கணித உபகரணப்பெட்டிகள் 6ஆம் வகுப்பு மற்றும் 9 ஆம் வகுப்பு), நோட்டுப் புத்தகங்கள் (1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை) மற்றும் சீருடைகள்(1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை) என மொத்தம் 11 வகையான கல்வி உபகரணங்கள் இன்றைய தினம் வழங்கப்படுகின்றன.
மேற்கண்ட அனைத்து பள்ளிகளிலும் பள்ளி திறக்கும் நாளான இன்றே வழங்கப்படுவதற்கான உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதென கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார். கரூர் எம்.பி. ஜோதிமணி, மாநகராட்சி மேயர் வெ. கவிதா. மாநகராட்சி ஆணையர் கே.எம். சுதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) செல்வமணி, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.