ஜூலை.23.
சென்னை புளியந்தோப்பில் துணை மின் நிலையத்தை மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது-
சரியான திட்டமிடும் திறனில்லாத கடந்த அதிமுக அரசு நம் மாநிலத்தின் கஜானாவை காலியாக்கியதோடு, தமிழ்நாடு மின்சார வாரியத்தை கடன் சுமையால் தள்ளாட வைத்துவிட்டது. 2011 வரை 43,493 கோடியாக இருந்த மின் வாரியத்தின் கடன் 2021ல் அதிமுக ஆட்சி முடியும் போது 1,59,823 கோடியாக உயர்ந்திருக்கிறது. 16,500 கோடி வட்டி மட்டும் செலுத்தும் நிலையை வைத்து விட்டு போய்விட்டார்கள். 2011ல் ரூ. 4,588கோடியாக இருந்த வட்டி சுமை, அதிமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தினால், 2021ல் ரூ. 16,511 கோடியாக உயர்ந்திருக்கிறது.
சொந்த மின்சார உற்பத்தி கிடையாது. தனியாரிடம் கொள்முதல் செய்தால் மின்மிகை மாநிலம் ஆகிவிடுமா?. மின் இணைப்பு கேட்ட லட்சக்கணக்கான விவசாயிகள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். மின்மிகை என்றால் உடனே இணைப்பு கொடுத்திருக்க வேண்டியதுதானே. ஒன்றிய அரசு நிறுவனங்கள் கடன் வழங்க மறுத்தும் அதை கேட்க திராணி இல்லாத அரசாங்கமாக செயல்பட்டனர். முதலமைச்சர் மு க ஸ்டாலின் நிர்வாகத்தை சீரமைத்து கடன் சுமையை குறைக்கவும் உற்பத்தி அதிகரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார்.
2200 கோடி சேமிப்பு
முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் தொலைநோக்கு திட்டங்களால்,
2021-22 நிதியாண்டில் மட்டும் பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக, ரூ 2,200 கோடி சேமிப்பு எட்டப்பட்டுள்ளது. தமிழக வரலாற்றிலேயே, 1 லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் ஒரு வருடத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
திரும்பத் திரும்ப பொய்யே சொல்லிக் கொண்டிருப்பவர்கள் அது உண்மையாக விடும் என நினைக்கின்றனர் அது நடக்காது. மாதந்தோறும் மின் கட்டணம் திட்டத்தை செயல்படுத்துவதற்காக வீடு வீடாக ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 70% மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது படிப்படியாக அனைத்து தேர்வு வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் கூட்டணி அமைத்து செயல்படும் அதிமுக பாஜகவினர் சமையல் எரிவாயு விலை, பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துகொண்டே போவதை மறைப்பதற்காக போராட்டம் நடத்துகின்றனர். இதையெல்லாம் கண்டிக்க அதிமுகவுக்குவும் தைரியம் கிடையாது மேலும் அதிமுக ஆட்சியில் 2012 ,2013 ,2014 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து மின்சார கட்டணத்தை உயர்த்தப்பட்டன. இந்த உயர்வு 37 சதவீதம் ஆகும். மக்கள் தெளிவாக இரூக்கின்றனர். என்றார்.